தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘அம்மா’ கல்லூரி: இந்திய கம்யூ. கோரிக்கை

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அத்தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டி கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய பொன்னுபாண்டி, ‘‘ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியான ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், ‘‘அதிமுக ஆட்சியில் 53 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டி லேயே தமிழகத்தில்தான் 42.8 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அருகில் உள்ள சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதி களில் கல்லூரிகள் இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூ ரில் தற்போது அரசு கலை கல்லூரி தொடங்குவதற் கான சாத்தியம் இல்லை’’ என்றார்.

அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனிடம், பி.டில்லிபாபு (அரூர்), கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), ஏ.கணேஷ் குமார் (செஞ்சி), என்.முருகுமாறன் (காட்டு மன்னார்கோவில்), எம்.திராவிடமணி (கூடலூர்), ஏ.அஸ்லம்பாட்சா (ஆம்பூர்), கோவி.செழியன் (திருவிடைமருதூர்), எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணி யன் (நெய்வேலி), டி.ராமச்சந்திரன் (தளி), செல்வி ராமஜெயம் (புவனகிரி) ஆகிய 10 உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என துணைக் கேள்வி எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத் தில் இருந்து பேரவை நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவிகள் கவனித்துக் கொண்டிருந்தனர்.

SCROLL FOR NEXT