கரூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட 28 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக 29, 31, 28 என கணிசமான எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டு வருகிறது. குளித்தலையில் தனியார் மருத்துவர், செவிலியர், கரூரில் ஒரு காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், மற்றொரு காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர், தனியார் கொசுவலை நிறுவன ஊழியர்கள் 6 பேர், 2 வயது பெண் குழந்தை, 72 வயது முதியவர் உள்ளிட்ட 28 பேருக்கு இன்று (ஜூலை 31) ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்ட 28 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் என தற்போது 162 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.