அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக கும்பகோணம் மகாமகக் குளத்தில் இருந்து நேற்று எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர். 
தமிழகம்

ராமர் கோயில் பூமி பூஜைக்கு மகாமகக் குளத்தின் புனித நீர்

செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆக.5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கும்பகோணம் மகாமகக் குளத்தில் இருந்து 5 குடங்களில் புனித நீர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி அனைத்து இந்து கூட்டமைப்புகள் சார்பில் நேற்று நடைபெற்றது. காசி விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர்கள் மகாமகம் தீர்த்தவாரி கட்டத்தில் இருந்து 5 குடங்களில் புனிதநீர் எடுத்துக் கொடுத்து பூஜைகளை செய்தனர்.

இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சோழராஜன், இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சிறப்பு வாகனத்தில் மகாமகக் குளத்தின் புனித நீரை அயோத்திக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT