அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று (ஜூலை 31) கலை, அறிவியல் படிப்புகள் பற்றி துறைசார் வல்லுநர்கள் உரை நிகழ்த்துகின்றனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளுக்கு விடைகாணும் வகையிலான இந்த இணையவழி நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
இன்றைய நிகழ்ச்சியில் இந்தியவருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் ஐஆர்எஸ், நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியின் (எஸ்ஐஇடி) தமிழ்த் துறை பேராசிரியர் டாக்டர் பர்வீன் சுல்தானா, நாசரேத்கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மேரி ஏஞ்சலின்சந்தோசம் ஆகியோர் பங்கேற்றுகலை, அறிவியல் படிப்புகள்தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்துகிறது. நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.