கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2015 - 2016-ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 100 எம்பிபிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி மருத்துவமனையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.