தமிழகம்

மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பொறுப்பேற்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனராக ரேவதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனராக பூபதி இருந்து வந்தார். அவர் பதவி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்றார்.

அவருக்குப் பதிலாக தற்காலிகமாக பொறுப்பு துணை இயக்குனராக கலைச்செல்வன் இருந்து வந்தார். தற்போது துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மாறுதலாகி சென்றார். இதையடுத்து,

பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனராக இருந்த ரேவதி தற்போது மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கணவே மதுரை மாவட்டத்தில் இதற்கு முன்

வாடிப்பட்டியில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT