தமிழகம்

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு செங்கல்பட்டு நீதிபதிகள் உதவி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செங்கல்பட்டு நீதிபதிகள் நிவாரண உதவிகளை வழங்கினர்.

தேவிபிரசாத், சரஸ்வதி தம்பதியர் காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவில் சரஸ்வதியின் தந்தை ராதாகிருஷ்ணன்(90) மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்தனர். இதில் தேவிபிரசாத்தும் சரஸ்வதியும் சமீபத்தில் இறந்துவிட, பிள்ளைகள் மூவரும் ராதாகிருஷ்ணனின் அரவணைப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் அரசு உதவிகள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரினர்.

பல்வேறு தரப்பினரின் உதவிகளைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா முன்னிலையில் ரூ.20 ஆயிரம், அரிசி, மாளிகை பொருட்கள் மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமா மகேஸ்வரி, கூடுதல் மாவட்ட நீதிபதி டாக்டர் கே.ராமநாதன், மாஜிஸ்திரேட் எம்.ஏ.கபீர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT