சென்னையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஐதராபாத், மதுரை மற்றும் வாரணாசியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
டெல்லி மற்றும் தூத்துக்குடியில் இருந்து வந்த விமானங்கள் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்த பின்னர், மழை குறைந்ததும் தரையிறங்கின. இரவு 7 மணிக்குப் பின்னர் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை வந்தன. இதனால், 500-க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.