தமிழகம்

ரூ.9 கோடியில் 3,501 நகரும் ரேஷன் கடைகள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ரூ.9.66 கோடி மதிப்பில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் உடனடியாக தொடங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்தும், மேற்கொள்ளவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியபோது, ‘‘குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப்பொருட்களை விநியோகிக்கும் நோக்கில் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என்றுஇந்த ஆண்டுக்கான பட்ஜெட் டின்போது விதி 110-ன்கீழ் முதல்வர் அறிவித்தார்.

அதற்கிணங்க, மாநிலம் முழுவதும் உள்ள 37 மாவட் டங்களில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் உடனே தொடங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT