பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது எனக் கோரி ஆவடி கனரக வாகன தொழிற்சாலை முன்பு பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

பாதுகாப்புத் துறை தனியார்மயத்தை கண்டித்து ஆவடியில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது. தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்கக் கூடாது. பல மாநிலங்களில் அதிகரிக்கப்பட்ட வேலை நேரத்தை 8 மணி நேரமாக்க வேண்டும். அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய மஸ்தூர் சங்கம் கடந்த 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மற்றும்ஆவடி இன்ஜின் தொழிற்சாலைஆகியவை முன்பு இச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என கோரிக்கை முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT