தமிழகம்

வியாபாரிகளுக்கு கரோனா தொற்று: தூத்துக்குடி பூ மார்க்கெட் மூடல்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் 9 பூ வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பூ மார்க்கெட் மூடப்பட்டது.

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

சுமார் 50 கடைகள் இந்த மார்க்கெட்டில் உள்ளன. தினமும் பரபரப்பாக இயங்கும் இந்த பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கான முடிவுகள் இன்று வந்தன. இதில் 9 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பூ மார்க்கெட் உடனடியாக மூடப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும், கரோனா தொற்று இல்லாத பூ வியாபாரிகள் தங்களது பூக்கடைகளை, பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக சந்தையில் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல வியாபாரிகள் தங்கள் கடைகளை பழைய பேருந்து நிலையத்தில் அமைத்து வியாபாரத்தை தொடர்ந்தனர்.

SCROLL FOR NEXT