தமிழகம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால், தாழ்வான சாலைகளில் நீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் சற்று குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலைகளில் மழைநீர்

திருவாலங்காட்டில் 53 மி.மீ., ஜமீன்கொரட்டூரில் 34, திருவள்ளூரில் 21, திருத்தணியில் 10, தாமரைப்பாக்கத்தில் 7, ஊத்துக்கோட்டையில் 5, கும்மிடிப்பூண்டியில் 4, செங்குன்றத்தில் 3 மி.மீ. என மழை அளவு பதிவானது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், ஜிஎஸ்டி மற்றும் நகரப்பகுதி சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

காஞ்சிபுரம் 22.2 மி.மீ.,பெரும்புதூர் 15.2, உத்திரமேரூர் 35.2,. திருப்போரூர் 6.7, செங்கல்பட்டு 8. திருக்கழுக்குன்றம் 19.40, மதுராந்தகம் 26, அச்சிறுப்பாக்கம் 16, செய்யூர் 69, தாம்பரம் 8 மி.மீ. என மழையளவு பதிவாகியிருந்தது. இதனால், ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழலில் அவர்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீர் மட்டத்தையும் இது உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT