தமிழகம்

கந்த சஷ்டி கவசம் படித்தார் விஜயகாந்த்: சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

சஷ்டி விரதத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரல் ஆனது.

கந்த சஷ்டி புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை படிப்பது போன்ற வீடியோவை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.

மேலும் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று
ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT