தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ. 40.75 கோடிக்கும் திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் ரூ.39.40 கோடி, கோவை ரூ.35.9 கோடி சென்னையில் ரூ.20 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.
முழு ஊரடங்கு தினமாக ஞாயிற்றுக் கிழமைகள் இருப்பதால் சனிக்கிழமைகளில் மதுவிற்பனை அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான 4ம் தேதி 171 கோடி ரூபாய்க்கும். கடந்த 11ம் தேதி சனிக்கிழமை ரூ.178 கோடிக்கும்
கடந்த 18ம் தேதி சனிக்கிழமை அதிகபட்சமாக ரூ.183 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமையன்று தமிழகத்தில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனையானது.