தமிழகம்

தென் மாவட்டங்கள்,கோவை, நீலகிரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடுமாவட்டம் கொடுமுடி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 4 செமீ, கன்னியாகுமரி மாவட்டம்பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிவலோகம் ஆகிய பகுதிகளில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT