தமிழகத்தில் தமிழகத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை துவங்கியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை 7 வயது சிறுமி, தூத்துக்குடியில் 14 வயது சிறுமி, மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி என 3 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையிலான குழுவினர் துவங்கியுள்ளனர்.
குறிப்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது அதனை போக்க “தமிழக காவல்துறையினருக்கு உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது பாராட்டத்தக்கது”, அதேநேரம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தர ஆணையம் என்றும் உறுதுணையாக இருக்கும் என ஆர்.ஜி.ஆனந்த் உறுதி அளித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மட்டும் 14 போக்ஸோ (POCSO) வழக்குகள் உட்பட 17 பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்றும் குழந்தைகள் நலனில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்”.
இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.