ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 15 துவங்கி துவங்கி 17 நாட்கள் ஜுலை 31 வரையிலும் நடைபெறுகிறது.
ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முதல் நாளான ஜுலை 15 புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.
கால பூஜையை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள அம்பாள் தங்கக்கொடி மரத்தில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆடித்திருவிழா தொடங்கியது.
ஜுலை 20 திங்கட்கிழமை ஆடி அமாவாசை அன்று கரோனா கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தேரோட்டமும் நடைபெறவில்லை.
இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற உள்ள திருக்கல்யாணம் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் இணையதளத்தில் நேரலையாக பார்க்கும் வகையில் https://youtu.be/DPbtFSXrMiQ என்ற யூடிப் (youtube) இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகளை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.