கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் உடைந்த நீர்வரத்துக் கால்வாயை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ பன்னீர்செல்வம். 
தமிழகம்

கலசப்பாக்கம் அருகே ஏரி உடைப்பால் கிராமங்களை சூழ்ந்த மழைநீர்: எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆய்வு

செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது.இதை எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்வரத்து கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குடிசை வீடுகள் சேதம்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் பட்டியந்தல், கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, வீரலூர், கீழ்குப்பம் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த மணிலா, நெல் ஆகியவை நீரில் மூழ்கின. குடிசை வீடுகளும் சேதமடைந்துள்ளன.

தகவலறிந்த கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து,ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளஇடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்புநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 

SCROLL FOR NEXT