தமிழகம்

அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து தனிமைப்படுத்தப்பட்டோர் சாலை மறியல்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தனியார் பள்ளியில் கரோனா தொற்று மற்றும் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில், சுமார் 70 பேர் நேற்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

“கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளோம். அடிப்படை வசதிகள் இல்லை. உணவு முறையாக வழங்கப்படுவதில்லை. குணமடைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் வீட்டுக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினர். மறியலில் ஈடுபட்டோரிடம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான உணவு வழங்கப்படும், குணமடைந்தவர்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மீண்டும் பள்ளி வளாகத்துக்குள் சென்றனர்.

SCROLL FOR NEXT