தமிழகம்

போலி சான்றிதழ் மூலம் இயங்கும் பெட்ரோல் நிலையங்கள்: விவரங்கள் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு

செய்திப்பிரிவு

போலி சான்றிதழ்கள் மூலம் இயங்கும் பெட்ரோல் நிலையங்கள் குறித்து தமிழகம் முழுவதும் பட்டியல் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கியதாக போலி தடையில்லா சான்றிதழை தயாரித்து பலருக்கு விற்பனை செய்து, பெரும் தொகை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், 67 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்குவது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் இதுபோல் எத்தனை நிலையங்கள் போலி சான்றிதழ் மூலம்இயங்குகின்றன என்பது குறித்துதமிழக டிஜிபி விரிவான பதில்அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் முறைகேடாக செயல்படும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியலைசேகரித்து தகவல் தெரிவிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT