தமிழகம்

விருதுநகரில் வேகமெடுக்கும் கரோனா: விசைத்தறி கூடங்களை ஒரு வாரம் மூட தீர்மானம்

இ.மணிகண்டன்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இம்மாதம் 26ம் தேதி முதல் ஒரு வாரம் விசைத்தறிக் கூடங்களை மூட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதி விசைத்தறி தொழிலாளர்களின் மகாசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவத் துணி உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வரும் 26ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பகுதியில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒருமனதாக வேலை நிறுத்தத்தை ஏற்று தாமாக சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT