விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழக அளவில் 3-வது இடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று ஒரே நாளில் 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,354 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 2,493 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,824 பேர் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.