தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கழுத்து வலி: மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

என்.சன்னாசி

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கழுத்து வலி ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ் ணன், காவலர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கை விசாரிக் கும் சிபிஐ குழுவினர் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை சிறையில் நேற்று வழக்கம் போல் எலும்பு சிகிச்சை மருத்துவர் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது, சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேரும் ஆய்வு செய்யப் பட்டபோது, தனக்கு பின்பக்க கழுத்தில் தொடர்ந்து வலி இருப் பதாக ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 9 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு கழுத்து வலிக்கான ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

பாதிப்பைப் பொறுத்து அவர் உள்நோயாளியாக அனுமதிக்கலாம். இல்லையெனில் மீண்டும் சிறைக்கு திரும்புவார் என, சிறைத் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT