தமிழகம்

நாகர்கோவில் காசியின் நண்பர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

கி.மகாராஜன்

பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் நண்பரின் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் வழியாக பெண்களைத் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து ஏமாற்றியுள்ளார்.

அந்தப் பெண்களுடன் தனிமையில் இருப்பதும், அதை புகைப்படம், வீடியோ எடுப்பதும், பின்னர் அதைக் காட்டி பணம் பறிப்பதும், பணம் கொடுக்க மறுக்கும் பெண்களை மிரட்டுவதும், அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் போன்ற செயல்களை காசி செய்து வந்துள்ளார்.

இவரிடம் ஏமாந்த சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போலீஸார் காசியை கைது செய்தனர். காசி மீது மேலும் பல வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் காசியின் நண்பர் திருவட்டாறு டேசன் ஜினோ (19) கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், என்னை போலீஸார் 9.5.2020-ல் கைது செய்தனர். 75 நாளாக சிறையில் உள்ளேன். என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என ஜினோ கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT