தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழாப் பணி களைத் தொடங்கும் விதமாக ராஜகோபுரம் முன்பு பந்தக் கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அண்ணாமலை உச்சியில் டிசம்பர் 25-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாப் பணிகளைத் தொடங்கும் விதமாக பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை நடைபெற்றது.

ராஜகோபுரம் முன்பு பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட் டப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க பந்தக்கால் நடப் பட்டது.

முன்னதாக, பஞ்ச ரதங்களுக் குக் கற்பூர தீபாராதனைக் காட்டப்பட்டது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன், பாஜக கோட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

SCROLL FOR NEXT