விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏட்டு ஒருவர் உயிரிழந்தார்.
ஏட்டு ஜெயப்பிரகாஷ் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் ஏட்டாகப் பணியாற்றியவர் ஜெயப்பிரகாஷ் (40). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 11-ம் தேதி தொற்று கண்டறியப் பட்டது. இதனால், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஏட்டு ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தார்.
இதையடுத்து ஏட்டு ஜெயப் பிரகாஷின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப் பட்டது. உயிரிழந்த ஏட்டு ஜெயப்பிரகாஷுக்கு மனைவி ஜெயசுதா, மகன் ஜெயரட்சகன் (10) ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் கரோனாவால் பாதித்து சிகிச்சைக்குப் பின் நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.