இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் நேதாஜி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவையும், அக்கட்சியின் அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தைப் பற்றியும் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனையொட்டி மதுரையில் நேதாஜி சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திமுக மாவட்டசெயலாளர் கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.கார்த்திகேயன், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பூமிநாதன், எம்.எல்.எப் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.மகபூப்ஜான், விசிக மாவட்ட செயலாளர் ப.கதிரவன், தி.க மாவட்ட செயலாளர் அ.முருகானந்தம்உள்பட அனைத்து எதிர்க்கட்சியினர் கலந்துகொண்டனர்.