முதியோர் உதவித் தொகை யாருக்கும் நிறுத்தப்படவில்லை என வருவாய்த்துறை அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் தெரி வித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய கோவி.செழியன் (திமுக), டில்லிபாபு (மார்க்சிஸ்ட்) ஆகி யோர், தமிழகத்தில் பலருக்கு முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் ஏழை முதி யோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழி லாளர்கள், கணவரால் கைவிடப் பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங் கப்படுகிறது. இதற்காக 2015-16 நிதியாண்டில் ரூ.4,198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் பய னாளிகளின் எண்ணிக்கை 36.56 லட்சமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆவணங் கள் ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருகிறது. தகுதி இல்லாதவர்களை கண் டறிந்து நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.
ஓய்வூதியம் பெறுவோர் பொரு ளாதார முன்னேற்றம் அடைந் தால் அவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறும் தகுதியை இழப்பர். தமிழகத்தில் யாருக்கும் முதியோர் உதவித் தொகை நிறுத் தப்படவில்லை. மத்திய அரசு விதிகளின் ஆய்வுப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.