தமிழகம்

கோவில்பட்டி தனியார் ஆலையில் 57 ஊழியர்களுக்கு கரோனா உறுதி: அம்மா உணவக ஊழியர்களுக்கும் தொற்று

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றும் 57 பேர் உட்பட 80 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றுறிரவு வந்த பரிசோதனை முடிவில் 57 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நகராட்சி சுகாதார அலுவலர் முற்றும் அம்மா உணவகத்தில் பணியாற்றிய 3 ஊழியர்கள் என மொத்தம் 80 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் காய்ச்சல் உள்ளவர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் சென்டரிலும் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், காய்ச்சல் இல்லாதவர்களை வீட்டில் வசதிகள் இருப்பின் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அம்மா உணவகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அம்மா உணவகம் மூடப்பட்டது.

ஆனால் அதேவேளையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT