மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு நாளுக்கு50 முதல் 70 வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும். ஒரு நாளுக்கு 50 விசைப்படகுகள் மட்டுமே மீன் பிடி இறங்கு தளத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
மீன் விற்பனைக்கு என குறிப்பிட்ட அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்யப்படும். காலை 8 மணிக்கு பின்கரை திரும்பும் விசைப்படகுகள் மறுநாள் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் சிறிய மீன்கள் கொள்முதல் செய்ய தினசரி 600 நடுத்தர மீன் விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் செவ்வாய் (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளது.