பிரதமர் அலுவலக இணை செயல ராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1994-ம் ஆண்டு நேரடிஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானபி.அமுதா. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி யாற்றினார்.
கடந்த ஆண்டு மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் பிரதமர் அலுவலகஇணை செயலராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர்பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும், மக்களின் அன்பையும் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பிரதமர்அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
இவ்வாறு ட்விட்டரில் முதல்வர் தெரிவித்துள்ளார்.