தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு: ஆட்சியர், டிஐஜிக்கு சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் ஆட்சியர், டிஐஜிக்கு சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி சரக டிஐஜி ஆகியோருக்கு தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஜான் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட குடும்பத்துக்கு நிகழ்ந்ததாக இதை கருதாமல் தங்கள் வீட்டில் நடந்த நிகழ்வாக கருதி அனைவரும் முழு ஒத்துழைப்பை அளித்தனர்.

இந்த விவகாரத்தில் விரிவான விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், திருநெல்வேலி சரக டிஐஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து அறிக்கை கிடைத்தபின், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT