போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழரான மோகன் நேற்று முன்தினம் அதிகாலை மரணமடைந்தார். இவரது உடல் நேற்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை மேடவாக்கம் சவுமியா நகரில் வசித்து வந்தவர் மோகன்(42). இலங்கைத் தமிழரான இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு போலி பாஸ்போர்ட் தொடர்பாக விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
இந்நிலையில் காவல் நிலையத்திலி ருந்த மோகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளிக் கரணை போலீஸார் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மோகன் மரணமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாரால் விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்ட மோகனின் உடலில் காயங் கள் இருந்ததாக கூறி இதுகுறித்து நீதி விசா ரணை நடத்த பல்வேறு அமைப்புகள் வலி யுறுத்தின. மோகனின் உடல் வைக்கப்பட் டிருந்த ராயப்பேட்டை அரசு பொது மருத் துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனால் மோகனின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு மோகனின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் திரண் டனர். நீதித்துறை விசாரணை கோரி மீண்டும் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வித்யா மதியம் 1.30 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு வந்தார். அங்கு போராட்டத் தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்தார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் 2 மருத்துவர் கள் மோகனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மோகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.