செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட சங்கரம்மாளின் உறவினர்கள். 
தமிழகம்

போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மாள் (37). இவர்களுக்கு 2 மகன்களும், 16 வயது மகளும் உள்ளனர். நேற்று சங்கரம்மாளின் ஆட்டை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சங்கரம்மாளையும், அவரது மகளையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கரம்மாளும், அவரது மகளும் விஷம் அருந்தினர். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, போலீஸாரை கண்டித்து சங்கரம்மாளின் உறவினர்கள் 100 பேர் நேற்று மதியம் செய்துங்கநல்லூர் காவல்நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT