பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அர்ச்சகரின் மகள் ஹரிணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார். ஹரிணியின் பெற்றோர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
தமிழகம்

பிளஸ்-2வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அர்ச்சகரின் மகளுக்கு ஆட்சியர் பாராட்டு

செய்திப்பிரிவு

பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற திருவள்ளூர் ராகவேந்திர சுவாமி மட அர்ச்சகரின் மகளை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்.

திருவள்ளூர் ராகவேந்திர சுவாமி மடத்தின் அர்ச்சகராக இருப்பவர் ராகவேந்திரன். இவரது மகள் ஹரிணி, பிளஸ்-2 பொதுத் தேர்வில், 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இதுகுறித்து, நேற்றைய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, மாணவி ஹரிணியை அவரது பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, பாராட்டுகளை தெரிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதுமட்டுமல்லாமல், ஹரிணியின் மேற்படிப்புக்கு உதவிகள் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT