கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சாரல் சீஸன் தொடங்கி அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டபோதிலும் தடை காரணமாக குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அருவியில் நீராடுவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால் பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றோரங்களிலும், நீர்நிலைகளிலும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதனால் ஆடி அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலத்துக்கு செல்லவில்லை. குற்றாலம் அருவிகள் வழக்கம்போல் வெறிச்சோடி காணப்பட்டன.