மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

பரவை காய்கறி மார்க்கெட் உச்சப்பட்டிக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

பரவை காய்கறி மார்க்கெட் நேற்று முதல் உச்சப்பட்டிக்கு மாற்றப் பட்டுள்ளது.

மதுரை பரவை மார்க்கெட்டில் கரோனா பரவல் அதிகரித்தது. இதனால் இந்த மார்க்கெட் 25 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. வேறு இடம் வழங்குமாறு அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத் தனர். இதையடுத்து மதுரை அருகே துணைக்கோள் நகரம் அமையும் உச்சப்பட்டிக்கு தற்காலிகமாக பரவை மார்க்கெட்டை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடி க்கை எடுத்தது. அங்கு மார்க்கெட் அமைக்க வசதிகள் செய்யப் பட்டன. இதையடுத்து பரவை மார்க்கெட் நேற்று மாலை முதல் உச்சப்பட்டிக்கு மாற்றப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி இங்கு காய்கறிகள் விற்பனை யை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே மூடப்பட்டிருந்த பரவை காய்கறி மார்க்கெட் .உச்சப்பட்டிக்கு மாற்றி செயல்படத் தொடங்கியுள்ளது.மாட்டுத் தாவணி மார்க்கெட், பூ, பழ மார்க்கெட், நெல் வணிக வளாகம் ஆகியவற்றிலும் நோய் தடுப்பு ஆய்வு செய்யப்பட்டது.

ரூ.201 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வுசெய்து பணிகளைத் துரிதமாக முடிக்க உத்தர விட்டுள்ளேன். மாவட்டத்தில் 6,441 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் தொடக்க நிலையில் தொற்று கண்டறிந்து குணப்படுத்தப்படு கிறது. கடந்த 7 நாட்களில் குண மடைந்தோர் எண்ணிக்கை 950 ேபர்.

மருத்துவமனைகளில் 5,500 படுக்கைகள் தயாராக உள்ளன. தினமும் 3,000 முதல் 5,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 96,199 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தான் கூடுதல் மாதிரிகள் எடுத்துள்ளோம். மூன்று வாரங்களுக்கு முன்பு 5 சதவீதமாக இருந்த தொற்று பரவல் படிப்படியாக 20 சதவீதம் வரை உயர்ந்தது. முழு ஊரடங்கு, தீவிர காய்ச்சல் முகாம் ஆகிய நடவடிக்கையால் 7 சதவீதமாக குறைந்து கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது ஆட்சியர் டி.ஜி.வினய், சரவணன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT