கோவை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் ஆ.லதா கூறியது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலைதேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கு ஏற்ற பணி வாய்ப்பு பெறலாம்.
தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்கள், அதற்கான தகுதி, சம்பளம் ஆகியவற்றை இதில் பதிவேற்றம் செய்யலாம். கட்டணமின்றி இந்த சேவை வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இணையதளத்தில் 418 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 5,600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத் தில் வேலைதேடும் பலருக்கு இந்த வசதி பயனுள்ளதாக உள்ளது. இவ்வாறு லதா தெரிவித்தார்.