தமிழகம்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சதுரகிரியில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசையன்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சதுரகிரி மலைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனு மதி இல்லை.

மேலும், தாணிப்பாறை, மாவூத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 21-ம் தேதி வரை பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT