புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு மீண்டும் திரும்பிய யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.படம்: எம்.சாம்ராஜ்` 
தமிழகம்

மணக்குள விநாயகர் கோயிலுக்கு யானை லட்சுமி மீண்டும் வந்தது

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி கடந்த ஜூன் 8-ம் தேதி வனத்துறை உத்தரவுக் கிணங்க புத்துணர்வு மற்றும் மருத்துவ சோதனைக்காக குருமாம்பேட்டில் உள்ள காமரா ஜர் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு 40 நாட்களாக லட்சுமி யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அந்த யானையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து லட்சுமி யானையை மீண்டும் அழைத்துவந்து பராமரிக்கும்படி தேவஸ்தான தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி யானை லட்சுமி குருமாம்பேட்டில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து நேற்று மணக்குள விநாயகர் கோயி லுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டது. கோயிலுக்கு வந்த யானைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச் சர் சம்பத், புதுச்சேரி எம்எல்ஏக் கள் லட்சுமி நாராயணன், அன்பழகன், ஜான்குமார், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT