தமிழகம்

செங்கல்பட்டு கோகுலம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டில் உள்ள கோகுலம் பொதுப் பள்ளியில் சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 72 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி எம்.மதுபாலிகா 500-க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். 4 மாணவர்கள் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 62 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி டி.பிருந்தா 500-க்கு 478 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோருக்கு பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், துணைத் தலைவர் வி.சி.பிரவீன், தாளாளர் லிஜிஷா பிரவீன், முதல்வர் கு.சங்கரநாராயணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் செங்கல்பட்டு கோகுலம் பொதுப் பள்ளி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வருகிறது.

SCROLL FOR NEXT