தமிழகம்

கரோனாவால் முடங்கிய கால்நடை வளர்ப்புத் தொழில்: 7% வட்டியில் ரூ.2 லட்சம் கடன்- முதன்முறையாக மதுரையில் தொடக்கம்  

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனாவால் முடங்கிய கால்நடை வளர்ப்பு தொழிலாளர்களுக்கு 7 சதவீதம் வட்டியில் ரூ.2 லட்சம் கடன் வழங்கும் திட்டம் மதுரையில் இன்று முதல் முறையாக தொடக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கரோனா நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சம் ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ரூ2 லட்சம் வரை 7 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 2,960 கால்நடை வளர்ப்போருக்கு பிரதமர் கால்நடை கடன் அட்டை வழங்க தமிழக அரசு இலக்கை நிர்ணயித்தது.

இந்தத் திட்டத்தை விளாச்சேரி யூனியன் பேங் ஆஃப் இந்தியா கிளையில் மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஐதிலகம் மற்றும் உதவி இயக்குனர் என்.ஆர்.சரவணண் ஆகியோர் முதல் முறையாக மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

40 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு பிரதமர் கடண் அட்டை வழங்கப்பட்டது. யூனியன் பேங் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் விளாச்சேரி கால்நடை மருத்துவர் சிவக்குமார் உடன் இருந்தனர்.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜதிலகம் கூறுகையில், ‘‘இந்தத் திட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயணடைய அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தைத் தொடர்புகொள்ளலாம். ஒரே ஆண்டிற்குள் இந்தக் கடனை அடைத்தால் 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT