தமிழகம்

குமரியில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 2400-ஐத் தாண்டியது: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 800 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 15 போலீஸாருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 152 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2400 பேரை தாண்டியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் தற்போது சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது. தட்பவெப்ப மாற்றத்தால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் தனித்திருந்து முன்னெச்செரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே கரோனாவினால் 15 பேர் மரணமடைந்துள்ள நிலையில் கரோனா தொற்று ஏற்பட்ட மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர் மரணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணக்கை 16 பேராக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT