தமிழகம்

தஞ்சையில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு; திருச்சியில் கரோனா பாதிப்பு 2,000-ஐ கடந்தது

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், 65 வயது பெண், 35 வயது கர்ப்பிணி, துறையுண்டார்கோட்டையைச் சேர்ந்த 48 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பண்ணைவயலைச் சேர்ந்த 60 வயது ஆண் என 5 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்த 60 வயது நபருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் நேற்று 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 2,004 ஆனது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 10 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 9 பேருக்கும், காரைக்கால் மாவட்டத்தில் 9 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 3 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT