கோப்புப் படம் 
தமிழகம்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 7 பேருக்கு கரோனா: கட்டணம் ரத்து

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அதே சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாக அலுவலரை சந்தித்து, இந்த சுங்கச்சாவடியில் 3 நாட்கள் கட்டண வசூலை நிறுத்துமாறு கூறியதை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து, சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி, பணியாளர்களை தனிமைப்படுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் கடந்து செல்கின்றன.

SCROLL FOR NEXT