தமிழகம்

ஊரடங்கில் பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் வசிக்கும் முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரம், நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதையொட்டி, காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனால் அங்கு அதிகமானோர் திரண்டனர். இதைத்தொடர்ந்து ஊரடங்கை மீறுதல், நோய்த் தொற்று பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கல்யாணசுந்தரம் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT