சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் திரும்பிவர உள்ள நிலையில், தினமும் காலையில் நடைபெறும் மீன் வியாபாரத்தை மாலையில் நடத்த மீனவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குநர் சமீரன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதிமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

செய்திப்பிரிவு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆய்வு செய்தார்.

சென்னையில் 115 நாட்களுக்கு பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடந்த 15-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், அங்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மீன்வளத் துறை இயக்குநர் சமீரன் ஆகியோர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், விசைப்படகு மீனவர்கள், மீன் வியாபாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, அதிக கூட்டம் சேராமல் மீன்களை விற்க வலியுறுத்தப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மீன் சந்தை உள்ளிட்ட 10 மீன் சந்தைகள் சென்னையில் திறக்கப்பட உள்ளன. எனவே, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சில்லரைவிற்பனையை மேற்கொள்ளகூடாது. மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை மற்றும் மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றுமீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், ஆணையர் கூறியதாவது: மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலை 6 முதல் பகல் 12 மணி வரை மீன் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி என விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT