பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2020 ஆண்டுக்கான உயிர்ச்சான்றிதழ் அளிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் உயிர்சான்றிதழ் அளித்தால் மட்டுமே பென்ஷன் தொடரும். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இவ்வாண்டு (2020) மட்டும் உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க இந்த வருடம் அலுவலகத்திற்கு வர வேண்டாம்.
மேலும், அடுத்த ஆண்டு (2021) முதல் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் உயிர்வாழ் சான்று நேரில் பெறப்படும்”.
என ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.