மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர் திறப்பு ஜூலை 1-ம் தேதி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது. கடந்த ஜூலை 11-ம் தேதி நீர் திறப்பு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நீர்திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று மாலை 10 ஆயிரம் கனஅடியாகவும் குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 72.42 அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 201 கனஅடியாகவும் உள்ளது.