யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு குறித்து தமிழக பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே அந்த யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் நேற்று முன்தினம் இரவு சென்னை வேளச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த சேனலைச் சேர்ந்தவரும், தொடர்புடைய வீடியோ பேச்சாளருமான சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். தகவல் அறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதுச்சேரி சென்று, அவரை சென்னை அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.